திட்டிய தாயிடம் ஜீவன் மன்னிப்பு கேட்கா விட்டால் மலையக மக்களின் தலைவராக இருக்க அவருக்கு தகுதி இல்லை! - நடிகை நிரஞ்சனி ஆவேசம் - - Yarl Voice திட்டிய தாயிடம் ஜீவன் மன்னிப்பு கேட்கா விட்டால் மலையக மக்களின் தலைவராக இருக்க அவருக்கு தகுதி இல்லை! - நடிகை நிரஞ்சனி ஆவேசம் - - Yarl Voice

திட்டிய தாயிடம் ஜீவன் மன்னிப்பு கேட்கா விட்டால் மலையக மக்களின் தலைவராக இருக்க அவருக்கு தகுதி இல்லை! - நடிகை நிரஞ்சனி ஆவேசம் - 
ஒரு தாயை இழிவுப்படுத்தியதன் ஊடாக, ஒட்டு மொத்த பெண்களையும் கொச்சைப்படுத்திய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட வீடியோவில் அவர் எந்தவொரு இடத்திலும் அந்த தாயிடம் மன்னிப்பு கேட்கவில்லை. என நடிகைகயும் பெண்ணிய செயற்பாட்டாளருமான நிரஞ்சனி சண்முக ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

இவர் எந்த தாயை கொச்சைப்படுத்தினாரோ, அந்த தாயின் முன்னிலைக்கு சென்று, அனைத்து ஊடகங்களையும் அழைத்து மன்னிப்பு கோர வேண்டும்.

அப்படி, இவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், மலையக மக்களின் தலைவராக இருக்க அவருக்கு தகுதி இல்லை.

ஒரு வார்த்தையின் ஊடாக அந்த தகுதியை அவர் ஏற்கனவே இழந்து விட்டார்.

ஆகக்குறைந்தது, அந்த தாயிடமேனும் அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

அவ்வாறு ஜீவன் செய்யவில்லை என்றால், அவர் இந்த இடத்தில் இருக்க தகுதி இல்லாதவர். என நடிகை நிரஞ்சனி தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை கொட்டகலையில் தாய்மாரை அவமானப்படுத்தும் பேசியதற்காக தனது வருத்தத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறி இருக்கிறார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post