நாடு அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது - அதற்கு காரணமானவர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்- கரு - Yarl Voice நாடு அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது - அதற்கு காரணமானவர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்- கரு - Yarl Voice

நாடு அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது - அதற்கு காரணமானவர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்- கருநாடு துரதிஸ்டவசமாக அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அதற்கு காரணமானவர்கள் அனைவரும்  ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்தது போன்று பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றனர் என முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நாட்டிற்கு பாதிப்பு அல்லது தீங்கு நேர்ந்தால் உண்மையான இலங்கையர்களே அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர்.

இதன்காரணமாகவே நாட்டில் இன்று இடம்பெறும் விடயங்களை பார்க்கும்போது நாங்கள்ஆழ்ந்த கவலையடைகின்றோம்.

ஆனால் துரதிஸ்டவசமாக அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அதற்கு காரணமானவர்கள் அனைவரும்  ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்தது போன்று பிடில் வாசிக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்களை கண்களை திறந்து நாட்டின் மீது கவிழுகின்ற பெரும் துயரத்தை பார்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் பொதுமக்களை பலிகொடுக்கவேண்டாம் என நாங்கள் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் இந்த பேரழிவிலிருந்து நாட்டை காப்பாற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post