தாயார் உயிரிழந்துவிடுவார்... ஒக்சிசன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள்’ - போலீசார் முன் மன்றாடிய நபர் - Yarl Voice தாயார் உயிரிழந்துவிடுவார்... ஒக்சிசன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள்’ - போலீசார் முன் மன்றாடிய நபர் - Yarl Voice

தாயார் உயிரிழந்துவிடுவார்... ஒக்சிசன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள்’ - போலீசார் முன் மன்றாடிய நபர்




எனது தாயார் உயிரிழந்துவிடுவார்கள்...  ஒக்சிசன்  சிலிண்டரை தயவு செய்து எடுத்து செல்லாதீர்கள் என்று போலீசார் முன் மன்றாடிய நபரின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 

ஆனால், மாநிலத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும்  ஒக்சிசன்  தட்டுப்பாடு இல்லை என்று உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒக்சிசன்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் புரளியை பரப்பும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது அம்மா உயிரிழந்துவிடுவார்கள்..ஒக்சிசன்  .  சிலிண்டரை தயவு செய்து எடுத்து செல்லாதீர்கள் என்று போலீசார் முன்  மன்றாடிய நபரின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது தாயாரை சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நபர் மருத்துவமனையில் இருந்து ஒக்சிசன்  சிலிண்டர் கொண்டு செல்லப்படுவதை தடுக்க போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் கொரோனா கவச உடை (பிபிஇ கிட்) அணிந்த அந்த நபர் போலீசார் முன் மண்டியிட்டு,

தயவுசெய்து சார். நான் சிலிண்டரை எங்கிருந்து ஏற்பாடு செய்வேன்? நான் என் அம்மாவை திரும்ப அழைத்து வருவேன் என்று என் குடும்பத்தினருக்கு உறுதியளித்த பிறகு இங்கு வந்தேன்.

எனது அம்மா இறந்துவிடுவார். ஒக்சிசன்   சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள். நான் உங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

அந்த நபர் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்த மருத்துவமனையில் இருந்து 2 பேர் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்கின்றனர் இது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள காங்கிரஸ் இளைஞரணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இது மிகவும் மனதை உடைக்கும் வீடியோ. உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் தனது தாய்க்கு ஏற்பாடு செய்திருந்த  ஒக்சிசன்  சிலிண்டரை எடுத்து செல்லவேண்டாம் என்று போலீசார் முன் ஒரு நபர் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறார். 

இது போலீசாரின் முழுமையான மனிதாபிமற்ற செயல். சகமனிதரை நீங்கள் நடத்தும் விதம் இதுதானா யோகி? (உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்)’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆக்ரா போலீஸ் அதிகாரி, ஆக்ராவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் அவர்களின் சொந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு வழங்கினர். 

அந்த வீடியோவில் காணப்படும் இரு நபர்களும் ஆக்சிஜன் இல்லாத வெற்று சிலிண்டரை கொண்டு செல்கின்றனர். வீடியோவில் காணப்படும் அந்த நபர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்யும் படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். 

ஆனால், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டரை யாரும் வெளியே கொண்டு செல்லவில்லை. இதுபோன்ற வீடியோக்கள் பரப்பப்படுவதை ஆக்ரா போலீஸ் கண்டிக்கிறது’ என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post