ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஷாஹித் அப்ரிடி அதிருப்தி - Yarl Voice ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஷாஹித் அப்ரிடி அதிருப்தி - Yarl Voice

ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஷாஹித் அப்ரிடி அதிருப்தி



ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார்

தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்இ 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

நேற்றுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்தது. இதில்இ முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என வெற்றிபெற்று சமநிலையில் இருந்ததால் கடைசி ஒருநாள் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால்இ இரண்டாவது போட்டியில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க வீரர்கள் காகிசோ ரபடா குவின்டன் டி காக் அன்ரிக் நோர்க்கியா டேவிட் மில்லர் லுங்கி நெகிடி ஆகியோர் மூன்றாவது போட்டியில் பங்கேற்காமல் ஏப்ரல் 9ஆம் தேதி (நாளை) துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தென்னிராப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் இந்தியா வந்தடைந்தனர்.

இதனால்இ கடைசி போட்டியில் தென்னாபிரிக்க அணி பலம் இழந்து காணப்பட்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 320ஃ7 ரன்கள் குவித்தது. ஃபக்கர் ஜமான் 101 ரன்களும் இமாம் உல் ஹக் 57 ரன்களும் எடுத்து ஸ்கோரை உயர்த்தினர்.

அடுத்துக் களமிறங்கியதென்னாப்பிரிக்க அணியில் துவக்க வீரர் ஜனிமன் மாலன் (70) கெய்ல் வெர்ரின் (62) ஆகியோர் அரை சதம் கடந்தும் அணி வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.

 இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் 292ஃ10 ரன்கள் மட்டும் சேர்த்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டி முடிந்தப் பிறகு ட்வீட் வெளியிட்ட பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி

 “பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிய தென்னாப்பிரிக்கா வீரர்களை தொடரின் நடுப்பகுதியில் ஐபிஎல் விளையாட அனுப்பி வைத்தது ஆச்சரியமாக உள்ளது. 

டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களைப் பாதிப்பதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது.

 இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post