பட்டதாரி மாணவனுக்கு சித்தார்த்தன் எம்பி உதவி - Yarl Voice பட்டதாரி மாணவனுக்கு சித்தார்த்தன் எம்பி உதவி - Yarl Voice

பட்டதாரி மாணவனுக்கு சித்தார்த்தன் எம்பி உதவிபட்டதாரி மாணவனின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில், மருத்துவ தேவைக்கான கண்ணாடி, புளொட் ஜேர்மன் கிளை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது -

யாழ்ப்பாணம், கட்டைப்பிராய்,  வேலாதோப்பு என்று இடத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவரான இராசலிங்கம் ஆனந்தசீலன் என்பவர் கண்ணின் விழித்திரை பாதிப்புற்று சிதைந்த நிலையில் உயர் மயோபியா நோயினால் நிரந்தர பார்வையிழப்பை எதிர்கொண்டிருந்தார்.  

அவர் பட்டப்படிப்பை நிறைவு செய்தும் கண் பிரச்சினை காரணமாக ஒரு தொழில் செய்து  தனது தாயையும்  சுகயீனமுற்ற தம்பியையும் பராமரிக்க முடியாது சிரமப்பட்டார். 

இந்நிலையில் தனக்கு மருத்துவக் கண்ணாடி ஒன்றை பெறுவதற்கு உதவுமாறு அவர் புளொட் அமைப்பிடம் கேட்டதற்கமைய  அவருக்கான கண்ணாடியை பெற்றுக் கொடுப்பதற்கு புளொட் அமைப்பின் ஜெர்மன் கிளைத் தோழர்கள் முன்வந்திருந்தனர். அதற்கான நிதியுதவியாக  ரூபாய் 58,500/=  கிளை உறுப்பினர்களால் அனுப்பி வைக்கப்பட்டு அவரின் மருத்துவ தேவைக்கான கண்ணாடி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் இன்று (19.04.2021) கண்ணாடி இ.ஆனந்தசீலனிடம் கையளிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post