கொரோனா பாதிப்புடன் தியேட்டரில் படம் பார்த்த நிவேதா - Yarl Voice கொரோனா பாதிப்புடன் தியேட்டரில் படம் பார்த்த நிவேதா - Yarl Voice

கொரோனா பாதிப்புடன் தியேட்டரில் படம் பார்த்த நிவேதா




நிவேதா தாமஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தியேட்டரில் வக்கீல் சாப் படம் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த 3ம் தேதி ட்விட்டரில் தெரிவித்தார் நிவேதா.

அவர் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் சேர்ந்து நடித்த வக்கீல் சாப் படம் தியேட்டர்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பிங்க் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த வக்கீல் சாப்.

இந்நிலையில் தியேட்டரில் கடைசி வரிசைக்கு பின்னால் நின்றபடி படம் பார்த்திருக்கிறார் நிவேதா தாமஸ். மாஸ்க் அணிந்து நின்று கொண்டு தான் படம் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிவேதா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post