மாகாணசபை கட்டளை சட்டங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கிய போதும் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பைசர் முஸ்தபாஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரின் இணைப்புச் செயலாளருமான உமாச்சந்திரபிரகாஷ் குற்றஞ்சாட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்கடந்த நல்லாட்சியில் நான் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்தபோது மாநகர கட்டளைச் சட்டங்களை தமிழ் மொழியில் மெழி பெயர்ப்புச் செய்தற்கு பல வழிகளிலும் முயன்றேன்.
அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரச கரும மொழி அமைச்சராக இருந்த மனோ கணேசனிடம் பல தடவைகள் இது பற்றி கூறியிருந்தேன்.
அதுமட்டுமல்லாது அப்போதைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக இருந்த பைசர் முஸ்தப்பாவிடம் பல தடவைகள் எழுத்து மூலமும் கோரியிருந்தேன்.
இவர்கள் இருவரும் யார் இதைச் செய்வது எந்த அமைச்சினால் மொழிபெயர்ப்பதற்கான நிதியை ஒதுக்குவது என ஆராய்ந்தே காலத்தை கடத்தி விட்டார்கள்.
அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் மாநகர கட்டளைச் சட்டங்களை தமிழ் மொழியிலும் மொழிபெயர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தேன்.
ஆதர் அதற்கிணங்கி சம்பந்தப்பட்டவர்களை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை போடுமாறு கேட்டிருந்தார் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
கொழும்பு மாநகர கட்டளைச் சட்டத்தின் இணைப்புப் பிரிவுகளை மட்டும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார்கள் அதனால் என்ன பயன்.
மேலும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் காரணமாக இருந்தார் என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியை தாண்டி விருப்பு வெறுப்புகள் உள்ளன.
அதன் வெளிப்பாடாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து மணிவண்ணன் கைது செய்யப்பட்டார் என்றால் ஐக்கிய மக்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்தில் இடம்பெற்றுவரும் முறைகேடுகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்.
முக்கியமாக சக்தியின் கதையைக் கேட்டு ஏன்? இந்த அரசாங்கம் முறைகேடுகளுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யவில்லை.
ஆகவே அரசாங்கம் தனக்கு தேவையானவற்றை விரும்பிய நேரத்தில் நிறைவேற்ற முற்படுவதே இதன் மூலம் புலப்படுவதாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment