அரசதுறையின் மூத்த அதிகாரி சிவஞானசோதி ஐயாவின் இழப்பு அரச துறையில் பாரிய வெற்றிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈடுஇணையற்ற பாரிய இழப்பாகும். - அங்கஜன் எம்.பி இரங்கல் - Yarl Voice அரசதுறையின் மூத்த அதிகாரி சிவஞானசோதி ஐயாவின் இழப்பு அரச துறையில் பாரிய வெற்றிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈடுஇணையற்ற பாரிய இழப்பாகும். - அங்கஜன் எம்.பி இரங்கல் - Yarl Voice

அரசதுறையின் மூத்த அதிகாரி சிவஞானசோதி ஐயாவின் இழப்பு அரச துறையில் பாரிய வெற்றிடம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈடுஇணையற்ற பாரிய இழப்பாகும். - அங்கஜன் எம்.பி இரங்கல்
யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி ஐயா பல அமைச்சுக்களின் செயலாளராக திறன்பட பணியாற்றி இருந்தார். 

குறிப்பாக இந்து கலாச்சார அமைச்சுஇ பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுஇ மீள்குடியேற்ற அமைச்சுஇ வடக்கு மாகாண ஜனாதிபதி செயலணிஇ நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார். 

இறுதியாக ஒய்வு பெற்ற பின்பும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றி கொண்டிருந்தார். 

நேற்றைய தினம் கொழும்பு – அப்பலோ வைத்தியசாலையில் திடீர் சுகவீனமுற்று தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் எம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல பல நாடுகளில் சிறந்த அரச விருதுகளையும் கல்வியல் விருதுகளையும் பெற்று எமக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த ஐயா நீண்டகாலமாக அரச பணியில் மிக பெரும் பங்கை குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களுக்கு ஆற்றியிருந்தார். 

ஒரு தலைசிறந்த மூத்த தமிழ் அரச அதிகாரியாக மட்டுமல்லாது ஓய்வு பெற்ற பின்பும் வடமாகாண மக்களுக்கு தொடர்ந்து செயலாற்ற வேண்டி என்னுடன் இணைந்து ஒரு ஆலோசகராக இறுதி மூச்சுவரை தொடர்ச்சியாக கலந்துரையாடி பல்வேறு சேவைகளை மக்களுக்கு திட்டமிட்டு வழங்கி கொண்டுவருகின்ற இவ்வேளையில் ஐயாவின் திடீர் இழப்பு தனிப்பட்ட ரீதியில் எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈடுஇணையற்ற பாரிய இழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போமாக.

0/Post a Comment/Comments

Previous Post Next Post