மக்களுக்கான எனது பயணம் தொடரும் - குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மணிவண்ணன் தெரிவிப்பு - Yarl Voice மக்களுக்கான எனது பயணம் தொடரும் - குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மணிவண்ணன் தெரிவிப்பு - Yarl Voice

மக்களுக்கான எனது பயணம் தொடரும் - குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மணிவண்ணன் தெரிவிப்பு



யாழ்.மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிாியான நடவடிக்கை தொடா்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை பொலிஸாா் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நான் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிக்கொள்கிறேன். 

“துாய்மையான நகரம், துாய்மையான கரங்கள்” என்று நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக நடந்து கொள்வதே யாழ்.மாநகர மக்களுக்கான எனது பணியாகும். அந்த பணியை செம்மையாகவும், முன்மாதிாியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிக தவறாக வியாக்கியானம் செய்து என்னை கைது செய்தாா்கள். 

மிக நெருடலான அந்த சூழலில் மக்கள், உள்நாட்டு வெளிநாட்டு  அரசியல் தலைவா்கள், சட்டத்தரணிகள், துாதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயா் உறவுகள், நண்பா்கள், ஆதரவாளா்கள் எனக்காக கொடுத்த குரல் எனக்கு ஆறுதலளித்தது மட்டுமல்லாமல் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

 என்னுடைய பயணம் மிக நோ்மையாது, வெளிப்படையானது, மக்களுக்கானது. 
பாதை எப்படியானது என்பதை தொிந்து கொண்டுதான் பயணத்தையே ஆரம்பித்திருக்கிறேன். 

ஆதாலால் எந்தவொரு சூழ்நிலையிலும் என்னுடைய பணயம் நிற்க்கப் போவதில்லை. மக்களுக்கான எனது பயணம் தொடரும், எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும், அமைப்புக்களுக்கும், மன நிறைவுடன் சிரம் தாழ்ந்து நன்றி கூறுகிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post