தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்புவலி தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் பங்களிப்பில் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

பிரதேச சபையின் தவிசாளர் க.தர்ஷன் சந்நிதியான் ஆச்சிரமத்திடம் வேண்டுகோள் விடுத்ததன் பயனாக குறித்த பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏழாலை குப்பிளான் மயிலங்காடு புன்னாலைக்கட்டுவன் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 30 குடும்பங்களுக்கே உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

வலி தெற்கு தவிசாளர் க.தர்ஷன் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகன் சுவாமிகள்இ கிராம சேவகர் அகிலன்இ பொதுச்சுகாதர பரிசோதகர் ஆகியோர் மக்களிடம் உதவிப்பொருட்களை கையளித்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post