யுவன் இளையராஜா காம்போவில்.. மனசை இதமாக்கும் மாமனிதனின் “தட்டிப்புட்டா.. தட்டிப்புட்டா” பாடல் - Yarl Voice யுவன் இளையராஜா காம்போவில்.. மனசை இதமாக்கும் மாமனிதனின் “தட்டிப்புட்டா.. தட்டிப்புட்டா” பாடல் - Yarl Voice

யுவன் இளையராஜா காம்போவில்.. மனசை இதமாக்கும் மாமனிதனின் “தட்டிப்புட்டா.. தட்டிப்புட்டா” பாடல்
இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் படத்தின் "தட்டிப்புட்டா தட்டிப்புட்டா" பாடல் வெளியாகி உள்ளது. 

யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையாராஜா இணைந்து இந்த பாடலை உருவாக்கி உள்ளனர். பா. விஜய்யின் வரிகளில் இளையராஜா பாடியுள்ள இந்த பாடல் கேட்கும் போதே மனதை மயக்குகிறது.

மக்கள் செல்வன் என்கிற பட்டத்தை வென்றுள்ள நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி உள்ள இந்த படத்தில் வேட்டி, சட்டை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். 

 இயக்குநர் சீனு ராமசமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள மாமனிதன் படத்தில் இடம்பெற்றுள்ள தட்டிப்புட்டா தட்டிப்புட்டா மனசை என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பாடலுடன் சேர்த்து பாடல் மேக்கிங் வீடியோவும் வெளியாகி உள்ளது. 

அப்பாவும் மகனும் யுவன் சங்கர் ராஜா இசையில் இசைஞானின் இளையராஜா தனது மாயக் குரலில் இந்த பாடலை பாடியுள்ளார். 

தற்போது வெளியாகி உள்ள பாடல் மேக்கிங் வீடியோவில் இளையராஜா மகன் யுவனை பார்த்து எல்லாம் ஓகேவா என்பது போல சிறு புன்னகையுடன் பார்க்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 இருவரும் இணைந்து இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா என இரு ஜாம்பவான்களும் ஒன்றாக முதன்முறையாக இணைந்து இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

 பாடலாசிரியர் பா. விஜய் இந்த பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். தர்மதுரை படத்தை போலவே மாமனிதன் படமும் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post