ரஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளில் ரகசிய வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலர் - Yarl Voice ரஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளில் ரகசிய வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலர் - Yarl Voice

ரஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளில் ரகசிய வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலர்
நடிகை ராஷ்மிகா மந்தனா இப்பொழுது இந்திய அளவில் பலராலும் கவனிக்கக்கூடிய முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்இந்தியில் அடுத்தடுத்து இரண்டு மெகா பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகத்தை கொடுத்த இவர் அடுத்து முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க நேற்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டி ரகசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மொழிகளையும் தாண்டி பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ரஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக மிகக்குறுகிய காலத்திலேயே பலரின் கனவுக்கன்னியாக இருக்க பாலிவுட்டிலும் அதிரடியாக அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான ரஷ்மிகா மந்தனா அடுத்து முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஞ்சு மற்றும் அமிதாப் பச்சன் உடன் இணைந்து ஒரு படம் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து பாலிவுட்டை வியக்க வைத்துள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமான ரஷ்மிகா அதில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின் அந்தக் காதல் பாதியிலேயே கைவிடப்பட்டது பலரும் அறிந்ததே.

இந்த கசப்பான காதல் முறிவிற்கு பிறகும் இருவரும் நண்பர்களாக பழகி வர அடிக்கடி ட்விட்டரில் பேசிக்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று ரஷ்மிகா தனது 25-ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்க முன்னாள் காதலரும் நடிகருமான ரக்ஷிட் ஷெட்டி க்ரிக் பார்ட்டி படத்தின் ஆடிஷனில் ரஷ்மிகா நடித்துக் காட்டிய க்யூட்டான வீடியோ ஒன்றை பதிவிட்டு, க்ரிக் பார்ட்டி ஆடிஷனில் நடந்த மிக அழகான தருணங்களை பகிர்கிறேன். 

உன் திரை வாழ்க்கையில் நீ நீண்ட தூரத்தை கடந்து ஒரு போராளியாக உன்னுடைய கனவை அடைந்துள்ளாய். உன்னை நினைக்கும் போது பெருமையாக உள்ளது பிறந்தநாள் வாழ்த்துக்கள் . என ரக்ஷித் ஷெட்டி பதிவிட்டு இருக்கும் இந்த பிறந்தநாள் வாழ்த்து இப்பொழுது சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post