நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு - Yarl Voice நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு - Yarl Voice

நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் நாளை மறு தினம் அதாவது எதிர்வரும் புதன்கிழமை 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் இதனை அறிவுறுத்தியுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாகத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அன்றைய தினம் இவ்வாறு பாதுகாப்பு வழங்கவுள்ள தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனை நிகழ்வுகள் காரணமாக, தேவாலயத்துக்கு அருகிலுள்ள சில வீதிகளில் நாளை (20) மாலை 4 மணி முதல் மறு நாள் (21) நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post