படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் - பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கஜேந்திரன் வேண்டுகோள் - Yarl Voice படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் - பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கஜேந்திரன் வேண்டுகோள் - Yarl Voice

படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் - பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கஜேந்திரன் வேண்டுகோள்பருத்தித்துறை தபாலகத்திற்குரிய காணியை படையினரிடமிருந்து விடுவித்து தபாலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் எழுதுமட்டுவாளில் 50 ஏக்கர் தனியார் காணியில் உள்ள 52ஆவது படைபிரிவு அமைந்துள்ள காணியை உரிமையாளரான மகேஸ்வரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்  பாராளுமன்ற கட்டடத்தில்  இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில்  கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி பிரதேச சபையின் நூல் நிலையத்திற்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறும் மொறக் கொட்டாஞ்சேனை பாடசாலை காணியை விடுவிக்குமாறும் கூட்டமைப்பு உறுப்பினர்களால் குறித்த ஆலோசனை குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post