யாழ் நகரை கண்காணிக்கும் மாநகர காவல்படை - Yarl Voice யாழ் நகரை கண்காணிக்கும் மாநகர காவல்படை - Yarl Voice

யாழ் நகரை கண்காணிக்கும் மாநகர காவல்படை
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட
யாழ் மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

யாழ் மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பது, தண்டப் பணத்தை பெறுவதற்காக குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.


குறித்த மாநகர காவல் படை நாளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயின் ஊற்றப்பட்டு நிலையில் விபத்துக்களைத் தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர காவல் படை கண்காணித்தது. 

யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை புதிய சீருடை ஒன்றை அறிமுகம் செய்து மாநகர காவல் படை என்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post