நடிகர் விவேக்கின் நகைச்சுவை கலந்த சிந்தனைகள் யதார்த்த வாழ்வில் நிஜமாகும் - அங்கஜன் எம்.பி - Yarl Voice நடிகர் விவேக்கின் நகைச்சுவை கலந்த சிந்தனைகள் யதார்த்த வாழ்வில் நிஜமாகும் - அங்கஜன் எம்.பி - Yarl Voice

நடிகர் விவேக்கின் நகைச்சுவை கலந்த சிந்தனைகள் யதார்த்த வாழ்வில் நிஜமாகும் - அங்கஜன் எம்.பி
சிரிப்பதற்கோர் நகைச்சுவையையும் சிந்திப்பதற்கோர் சிந்தனைகளையும் எம்மிடம் விதைத்த தென்னிந்திய நகைச்சுவை நடிகரும்  பல தேசியவிருதுகளையும், பத்மஶ்ரீ விருதையும், தனியார் சிறப்பு விருதுகளுயும் பெற்ற நடிகர் விவேக் அவர்களின் பிரிவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர்களுக்கும் உலகில் பரந்ந்து வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாரிய இழப்பாகும் என இலங்கை பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் (பா.உ) இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்
இன, மத, மொழிகளுக்கு அப்பால் நடிகர் விவேக் தனது நகைச்சுவைகளால் பலரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர், சமூகத்தில் பல்வேறு உதவிகளையும் சமூக சிந்தனைகளையும் விதைத்தது மட்டுமின்றி இந்தியா முழுவமும் 33 லட்சம் மரக்கன்றுகளை நாட்டு ஓட்டு மொத்த உலகிற்கும் இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுயவர். எம்மை விட்டு பிரிய முன்பும் கூட சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களையும் எடுத்துகாட்டையும் கூறி சென்றது இன்னும் எம் நினைவில் உள்ளது.

 இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஆன டாக்டர் அப்துல்கலாம் அவர்களது கருத்துக்களையும் பட்டித்தோட்டி இளைஞர்கள் முதல் பாமர இளைஞர்கள் வரை பரந்து கொண்டு சென்ற சிறந்த நடிகர் விவேக் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post