கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி - Yarl Voice கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி - Yarl Voice

கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி
கொரோனா அச்சம் காரணமாக் கடந்த 26ஆம் திகதி முதல் மூடப்பட்ட யாழ்.நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் தொற்று உறுதி செய்யப்படாத வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறக்க நாளை (08) தொடக்கம் அனுமதிக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.

 கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை காலை முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறும் தற்போதைய நிலையில் பொது மக்கள் ஒன்று கூடலை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post