தேசிய வெசாக் நிகழ்வு முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் நயினாதீவில் இடம்பெற்றது - Yarl Voice தேசிய வெசாக் நிகழ்வு முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் நயினாதீவில் இடம்பெற்றது - Yarl Voice

தேசிய வெசாக் நிகழ்வு முன்னேற்பாட்டு குழுக் கூட்டம் நயினாதீவில் இடம்பெற்றது
நயினாதீவு ராஜ மகா விகாரையில் இம் முறை தேசிய வெசாக் நிகழ்வுகள் நடை பெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்வு சம்பந்தமான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று நயினாதீவு விகாரையில் இடம் பெற்றது.

மே 23-28 திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த வெசாக் நிகழ்வில் ,24 ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளில் நாட்டின் ஜனாதிபதிமற்றும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ள நிலையில் புத்தசாசன அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் குறித்த நிகழ்வின் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இடம்பெற்றது

 நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தேசிய வெசாக் நிகழ்விற்கு பலர் கலந்து கொள்ள உள்ளதன் காரணமாக நிகழ்விற்கு வருவோருக்கான போக்குவரத்து, உணவு, மின்சாரம் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு அவை தொடர்பான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதோடு 
கடல் பயணம் மேற் கொள்ளப்படவுள்ளத னாள் கலந்துகொள்வோருக்கான கடல் பயண ஏற்பாடுகள் படகு ஒழுங்குகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது

குறித்த முன்னேற்பாட்டு குழுக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், புத்தசாசன அமைச்சின் உயர் அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராணுவ உயரதிகாரிகள் நயினாதீவு விகாரையின் விகாராதிபதி புத்தசாசன அமைச்சின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post