ஏ.ஆர். ரஹ்மான் சோகமாக இருந்தால் யார் பாட்டை கேட்பார் தெரியுமா? - Yarl Voice ஏ.ஆர். ரஹ்மான் சோகமாக இருந்தால் யார் பாட்டை கேட்பார் தெரியுமா? - Yarl Voice

ஏ.ஆர். ரஹ்மான் சோகமாக இருந்தால் யார் பாட்டை கேட்பார் தெரியுமா?



நாம் எல்லாம் சோகமாக இருந்தால் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களை கேட்போம். ஆனால் அவர் சோகமாக இருந்தால் யார் பாடல்களை கேட்பார் என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இத்தனை ஆண்டுகளாக இசையமைப்பாளராக வலம் வந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 99 சாங்ஸ் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் 99 சாங்ஸ் படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. 99 சாங்ஸ் படத்திற்கு கதையும் எழுதியிருக்கிறார் ரஹ்மான்.

இந்நிலையில் யூடியூப் பிரபலமும், இசையமைப்பாளருமான யஷ்ராஜ் முகாதே ஏ.ஆர். ரஹ்மானை பேட்டி எடுத்துள்ளார்.
ரஹ்மானை பார்த்த யஷ்ராஜோ, உங்கள் முன்பு வர வேண்டும் என்பது என் கனவு. தற்போது நான் அடைந்திருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க முடியாது என்றார்.

அதற்கு ரஹ்மானோ, நீங்கள் நிறைய பேரை மகிழ்ச்சி அடைய வைக்கிறீர்கள். அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அது நல்ல விஷயம் என்றார்.

99 சாங்ஸ் படத்தை தயாரிப்பதுடன், நீங்களே இயக்கியிருக்கலாமே என்று கேட்டார் யஷ்ராஜ். அதற்கு ரஹ்மான் கூறியதாவது, அந்த படத்தை நான் இயக்க வேண்டும் என்றால் 2 ஆண்டுகள் தேவைப்படும் என்றார்.

நீங்கள் சோகமாக இருக்கும்போது எது மாதிரியான இசையை கேட்பீர்கள் என்று யஷ்ராஜ் கேட்க ரஹ்மானோ, நான் உங்கள் பாடல்களை கேட்பேன் என்று பதில் அளித்தார். அதை கேட்ட யஷ்ராஜுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.

நாம் எல்லாம் சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும், போர் அடித்தாலும், எந்த மூடில் இருந்தாலும் ரஹ்மானின் பாடல்களை கேட்போம். அவரோ யஷ்ராஜ் இசையை கேட்கிறாராம்.

99 சாங்ஸ் படம் மூலம் இஹான் பட், எடில்சி வர்காஸ் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகிறார்கள். மனிஷா கொய்ராலா, லிசா ரே, ஆதித்யா சீல், தென்சின் தல்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஹ்மான் கதை எழுதி, தயாரித்திருக்கிறார் என்பதாலேயே 99 சாங்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. படம் ரஹ்மானை போன்றே வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post