யாழில் ஏற்பட்டுள்ள ஆபத்திற்கு சுகாதாரதுறையின் அசண்டையீனமே காரணம் - ஜெயேந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice யாழில் ஏற்பட்டுள்ள ஆபத்திற்கு சுகாதாரதுறையின் அசண்டையீனமே காரணம் - ஜெயேந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice

யாழில் ஏற்பட்டுள்ள ஆபத்திற்கு சுகாதாரதுறையின் அசண்டையீனமே காரணம் - ஜெயேந்திரன் குற்றச்சாட்டு



யாழ்.நகரம் முடக்கப்படுமாயின் ஏற்படும் நஷ்டத்துக்கு அரச அதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொறுப்பாவீர்கள் என்று அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது

மண்.பெண்,பொன் ஆசை போல் பலருக்கு பதவி மேலும் ஆசை உண்டு. அது தவறில்லை, ஆனால் பதவியில் இருந்து கொண்டு கடமைகளைச் சரிவரச் செய்வதற்கு தவறுகின்றனர்.

தற்போது உலகத்தில் எங்கு கொரோனா இல்லை. உலகம் எல்லாம் முடங்கிவிட்டதா, முடக்கும் பிரதேசத்தில் மக்கள் படும் கஷ்ரங்களை கவனத்தில் எடுப்பதில்லை. அந்த மக்களுக்கு நிவாரணம் கூட வழங்க முடியாமல் இருந்து கொண்டு பிரதேசங்களை முடக்குவது எந்தவிதத்தில் நியாயமாகும். அரச அதிகாரிகள் சிந்திப்பார்களா.

அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் அதனை வைத்துக் கொண்டு காவடி ஆடுவது போல் உள்ளது. 

அதிகாரத்தில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது மக்கள் தொடர்பில் அக்கறை எடுக்க வேண்டும். இல்லாது விடின் பதவியை விட்டு வெளியே போங்கள் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post