முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 12ஆவது ஆண்டு பிரதான நிகழ்வு பிரத்தாயோக இடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது - Yarl Voice முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 12ஆவது ஆண்டு பிரதான நிகழ்வு பிரத்தாயோக இடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது - Yarl Voice

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 12ஆவது ஆண்டு பிரதான நிகழ்வு பிரத்தாயோக இடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எழிமையாக நடைபெற்றது. 

வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான சுடர் ஏற்பட்டு விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

போரின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் முல்லை மண், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதோடு, முப்படையினரினதும், பொலிஸாரினதும், புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில், நிலைமைகள் சுமூகமில்லாத விடத்து மாற்று வழியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என்று ஏற்கனவே பொதுக்கட்டமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு இணங்க பிரத்தியேகமானதொரு இடத்தில் இரகசியமாக அந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 
அத்தோடு முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post