மே 21 ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் மே 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் பயணத்தடை - இராணுவத் தளபதி அறிவிப்பு - Yarl Voice மே 21 ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் மே 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் பயணத்தடை - இராணுவத் தளபதி அறிவிப்பு - Yarl Voice

மே 21 ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் மே 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் பயணத்தடை - இராணுவத் தளபதி அறிவிப்புநாடு முழுவதும் மேலும் 2 பயணத் தடைகள்... 

இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பயணத் தடைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆயினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post