யாழில் இன்றுவரை 2672 பேருக்கு கொரோனா! 34 பேர் உயிரிழப்பு - Yarl Voice யாழில் இன்றுவரை 2672 பேருக்கு கொரோனா! 34 பேர் உயிரிழப்பு - Yarl Voice

யாழில் இன்றுவரை 2672 பேருக்கு கொரோனா! 34 பேர் உயிரிழப்பு



 தற்பொழுது  கொரோனா   தொற்று  நிலைமை யாழ்மாவட்டத்தில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது இறுதியாக கிடைத்த அறிக்கையின்படி 59 பேருக்கு தொற்று உறுதியாகிருக்கிறது யாழில் இன்று வரை  2 ஆயிரத்து 672 பேர் தொற்றுக்குள்ளாகி யிருக்கிறார்கள் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன

யாழ் மாவட்டத்தில் 2543 குடும்பங்களைச் சேர்ந்த 6413 பேர்  சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

கடந்த வாரம் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு அந்தோணி புரம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நிலையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 47 கிராம அலுவலர் பிரிவில் 60 குடும்பங்களை கொண்ட கிராமத்தினை தனிமை படுத்துவதற்குரிய சிபார்சு வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை தொடக்கம் அந்த பகுதி தனிமைப்படுத்தப்படும்.

சில கிராமங்களில் தொற்று நிலைமை சற்று தீவிரமாக காணப்படுகின்றது மக்கள் நடமாட்டம் மாநகரப் பகுதிகளில் பெருமளவில் கட்டுப் படுத்தப் பட்டாலும் கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலை காணப்படுகின்றது 

எனவே பொதுமக்கள்  இது  மிகவு அபாயமான காலகட்டம் எனவே பயணத் தடை காலத்தில் வீடுகளில் இருந்து தங்களுடைய வழமையான செயற்பாட்டை செயற்படுத்த வேண்டும்.    

கிருமித் தொற்றுக்கு மிகவும்  பாதுகாப்பானது  வீடுகளில் இருப்பது தான். எனவே பயணத்தடையினை அனுசரித்து பொதுமக்கள் வீடுகளில் இருப்பது அவசியமாகும்

தொற்று நிலைமையானது சமூக  தொற்றாக  மாறுவதற்கு நாம் இடமளிக்காது பயணத்தடையினை அனுசரித்து நாம் வீடுகளில் இருத்தல் மிகவும் நல்லதாகும்

அரசின் பயண தடையானது எதிர்வரும் 7ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதனை அனுசரித்து பொதுமக்கள் தங்களுடைய செயற்பாடுகளை செயற்படுத்துவது மிகவும் அவசியமான தொன்றாகும்

ஒவ்வொரு கிராமங்களிலும் நடமாடும் வர்த்தக  செயற்பாடுகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த விடயம் தொடர்பில் பிரதேச செயலர் கிராம உத்தியோகத்தர்களால்  அறிவுறுத்தல் வழங்கப்படும்.

 எனவே பொதுமக்கள் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய வீட்டில் இருந்தவாறு தொலைபேசி ஊடாக தங்களுடைய கோரிக்கையை முன்வைத்தால்  உரிய பொருட்களை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும் 

 அத்தோடு மாவட்ட செயலகத்தினால் அத்தியாவசிய தேவை தொடர்பில் தொடர்பு கொள்வதற்கான இலக்கங்களும் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன எனவே அதன் மூலமும் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவை தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள முடியும்

மிக அத்தியாவசிய தேவை நிமித்தம் பிரதேச செயலகம் ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபட பவர்களுக்கு மாத்திரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது.

 அதோடு மாவட்டங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபடு வோருக்கு மாவட்ட செயலகத்தின் ஊடாக அனுமதி வழங்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் தங்களுடைய பிரதேச செயலரிடம் தொடர்பு கொள்வதன் மூலம் அனுமதியினை  பெற்றுக்கொள்ள முடியும் 

அத்தோடு தனிமைப் படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான அரசின் இடர் கால உதவியான  பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர்  அனைவருக்கும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது 

 தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளூர் அனைவருக்கும் அரசின் இடர்  கால நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றது அதாவது அரச உத்தியோகத்தர் வருமானம் மட்டம் பார்க்கபடாமல்  சுகாதார பிரிவினரால் சிபார்சு செய்யப்படும் அனைவருக்கும் அந்த உதவி வழங்கப்படுகிறது

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிசிஆர் பரிசோதனையில் பாவிக்கப்படும்  இராசாயன திரவத்திற்கு  தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

அந்த நிலையின் காரணமாக மூன்று நாட்கள் அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியாதநிலை  நிலை காணப்பட்டதாகவும் எனினும்  தற்போது அந்த நிலமைக்குரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post