எதிர்வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின் - Yarl Voice எதிர்வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின் - Yarl Voice

எதிர்வரும் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின்




தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

சட்டபேரவையில் பெரும்பான்மைக்கு 118  தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125- தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில்  திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post