8-9 நாட்களுக்கு தூக்கமிழந்தேன்... இனி கிரிக்கெட் ஆட முடியுமா என்ற கேள்வி ஏற்பட்டது: அஸ்வின் மனம் திறப்பு - Yarl Voice 8-9 நாட்களுக்கு தூக்கமிழந்தேன்... இனி கிரிக்கெட் ஆட முடியுமா என்ற கேள்வி ஏற்பட்டது: அஸ்வின் மனம் திறப்பு - Yarl Voice

8-9 நாட்களுக்கு தூக்கமிழந்தேன்... இனி கிரிக்கெட் ஆட முடியுமா என்ற கேள்வி ஏற்பட்டது: அஸ்வின் மனம் திறப்புதன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதித்ததையடுத்து 8-9 நாட்கள் தூக்கத்தை இழந்ததாகவும் கிரிக்கெட்டே இனி ஆட முடியுமா என்ற கேள்வி எழுந்தது என்றும் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

யூடியூப் சேனலில் அஸ்வின் கூறியதாவது:

எங்கள் குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைவருக்குமே கொரோனா தொற்றியது. என்னுடைய கசின்களுக்கும் கொரோனா தொற்றி அவர்கள் சீரியஸ் நிலைக்குச் சென்று எப்படியோ மீண்டு விட்டனர்.

என்னால் 8-9 நாட்களுக்கு தூங்க முடியவில்லை. உண்மையில் என்னை இது பயமுறுத்தியது, மன அழுத்தம் அதிகமாக இருந்தது. தூக்கமின்றிதான் போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்தேன். இது ஓரளவுக்கு மேல் மிகவும் பாரமாக இருந்தது அதனால் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகினேன்.

அப்போது இருந்த மனநிலையில் இனி கிரிக்கெட் ஆட முடியுமா என்பதே எனக்கு கேள்வியாக இருந்தது. இருந்தாலும் அந்த நேரத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு முடிவெடுத்தேன், கொஞ்ச நாளைக்கு கிரிக்கெட் வேண்டாம் என்று.

இடையே என் குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவிலிருந்து குணமடையத் தொடங்கிய போது மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் ஆடலாமா என்று யோசித்தேன் ஆனால் அதற்குள் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டு விட்டது. என்றார்.

அஸ்வின் தற்போது மும்பையில் இந்திய அணியுடன் குவாரண்டைனில் இருக்கிறார். மிகவும் கண்டிப்பான குவாரண்டைன், ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர அனுமதியில்லை. 7 நாட்கள் கழித்து கோவிட் நெகெட்டிவ் 3 முறை வந்த பிறகு ஜிம், பயிற்சி மேற்கொள்ளலாம். 10 நாட்களுக்குப் பிறகு பொது இடங்களுக்கு வரலாம் மற்றவர்களுடன் உரையாடலாம்.

டெஸ்ட் அணி ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. ஐபிஎல் மீதிப் போட்டிகளை யுஏஇயில் நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் செப்டம்பர்-அக்டோபரில் நடக்கலாம் என்று தெரிகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post