வலி வடக்கில் பொது மக்கள் குடியிருப்புகளை ஊடறுத்து புதிய பாதைகளை அமைக்கிறது இராணுவம் - மக்கள் அச்சம் - Yarl Voice வலி வடக்கில் பொது மக்கள் குடியிருப்புகளை ஊடறுத்து புதிய பாதைகளை அமைக்கிறது இராணுவம் - மக்கள் அச்சம் - Yarl Voice

வலி வடக்கில் பொது மக்கள் குடியிருப்புகளை ஊடறுத்து புதிய பாதைகளை அமைக்கிறது இராணுவம் - மக்கள் அச்சம்வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகளிற்கு உட்பறமாக புதிதாக வீதிகள் அமைக்கப்படுகின்றமை காணி உரிமையாளர்களிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலி. வடக்கில் கட்டுவன், வசாவிளான், குரும்பசிட்டி ஆகிய முன்னரங்க தடுப்பு வேலிகளை அண்டி படையினர் போக்குவரத்துச் செய்யும் குறுகிய பாதைகள் நீண்டகாலமாக காணப்பட்டது. இவ்வாறு காணப்பட்ட பாதைகள் படையினர் தமது நிலைகளை மாற்றும்போது மாறியது.

இருந்தபோதும் அண்மை நாட்களாக பதைகளின. அருகே இருந்து பற்றைகள் துப்பரவு செய்யப்படுவது மட்டுமன்றி மேலதிக மண் கொட்டப்பட்டு வீதியாக அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்படும் வீதிகளில் கற்கள் பரவப்பட்டு தார் வீதிகளாக நிரந்தரமாக அமைக்கப்படுமா என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நவகை வீதிகள் பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 647 ஏக்கரின் சுற்று வட்டத்திற்கும் நீண்டு அப் பகுதிகளிலும் வீதி அமைப்பு பணிகள் இடம்பெறுகின்றன.

2020ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அரசில் வலி . வடக்குப் பகுதியிலே பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 647 ஏக்கர் நிலப் பரப்பினையும் நில உரிமையாளர்களிற்கு வழங்க இணங்கியபோதும் இதன்மூலம் குறித்த நிலம் விடுவிக்கப்படுமா என்ற ஐயம் வலுப்பெறுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post