யாழில் தொற்று அதிகரிப்பு மக்கள் அலட்சியம்: யாழ்.அரச அதிபர் கவலை - Yarl Voice யாழில் தொற்று அதிகரிப்பு மக்கள் அலட்சியம்: யாழ்.அரச அதிபர் கவலை - Yarl Voice

யாழில் தொற்று அதிகரிப்பு மக்கள் அலட்சியம்: யாழ்.அரச அதிபர் கவலை
யாழில் தொற்று வீதம் அதிகரிப்பு பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதாக  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் கவலை தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும்  நிலை காணப்படுகிறது.

ஆகவே நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். பொதுமக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்கவே இவ் பயண கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் அலட்சியமான போக்கில் செயல்படுவதை காண முடிகிறது.

வைத்தியசாலைகளில் தற்போது பாரிய இடப்பற்றாக்குறை காணப்படுகிறது. இடை நிலை பராமரிப்பு நிலையங்களை ஆரம்பித்தோம். அவை கூட தற்போது நிரம்பும் நிலை காணப்படுகிறது.

இச்சூழ்நிலையில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். இத்தொற்றால் சுகாதார பணியாளர்கள் கூட பாதிக்கப்பட்ட நிலைமை காணப்படுகிறது. 

ஆகவே பொதுமக்கள் தமது அலட்சிய போக்கில் இருந்து தொற்றை ஏற்படுத்த காரணமாக இருந்து அவர்களை எதிர்காலத்தில் பராமரிக்க கூட இயலாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாமென பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post