வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றம் - Yarl Voice வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றம் - Yarl Voice

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றம்
வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலத்தில் நீண்ட சர்ச்சையின் பின்பு அமைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்படுகின்றது.

வடக்கின் சகல மாவட்டங்களிலும் அமைக்கப்படும் மேலதிக கொரோனா வைத்தியசாலைகளின் ஏற்பாட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 200 படுக்கை வசதிகள் கொண்டதாக தேக்கவத்தையில் அமைக்கப்பட்ட  பொருளாதார மத்திய நிலையம் மாற்றப்படுகின்றது.

வவுனியா ஓமந்தைப் பகுதியில் உள்ள கலாச்சார மண்டபத்தை கொரோனா வைத்மியசாலையாக மாற்ற பரிசீலிக்கப்பட்டபோது அங்கே வசதி வாய்ப்புக்கள் போதாமை காரணமாக பொருளாதார மத்திய நிலையத்திற்காக அமைக்கப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் கட்டிடம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்படுகின்றது.

ஓமந்தையிலா தாண்டிக்குளத்திலா  பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது என்ற நீண்ட இழுபறியின் பின்பு தேக்கவத்தையில் அமைக்கப்பட்டு இன்றுவரை பிரயோசனம் இன்றி இருந்த கட்டிடம் தற்போது கொரோனா வைத்தியசாலையாகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post