வரணியில் வாள்வெட்டு இளைஞன் ஒருவர் காயம் - Yarl Voice வரணியில் வாள்வெட்டு இளைஞன் ஒருவர் காயம் - Yarl Voice

வரணியில் வாள்வெட்டு இளைஞன் ஒருவர் காயம்
தென்மராட்சி-வரணி சந்தைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வரணி சந்தைப் பகுதியில் நின்ற இளைஞனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதில் கரம்பைக் குறிச்சி வரணிப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post