இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மாணவர்கள், இந்த செயற்பாடு எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும் என கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக நேற்றைய தினம் பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் குறித்த தடைகளை மீறி மாணவர்கள் பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment