அறிமுக டெஸ்டில் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் - Yarl Voice அறிமுக டெஸ்டில் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் - Yarl Voice

அறிமுக டெஸ்டில் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்
இலங்கை அணியின்  அறிமுக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்கிரம தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆறுவிக்கெட்களை வீழ்த்தி முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்களை வீழ்;த்திய சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துகொண்டுள்ளார்.

பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பங்களாதேசின் முதல் இனிங்சில் பிரவீன் ஜயவிக்கிரம 92 ஓட்டங்களிற்கு ஆறுவிக்கெட்களை வீழ்த்தினார்.

பங்களாதேஸ் அணியின் அனுபவவீரர்களான தமீம் இக்பால் முஸ்பிகூர் ரஹீம் போன்றவர்களையும் 22 வயது சுழற்பந்துவீச்சாளர் ஆட்டமிழக்க செய்தார்.

தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் ஐந்துவிக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இலங்கையின் கோசல குருப்புராச்சி உபுல்சந்தன அகிலதனஞ்சய ஆகியோர் தங்கள் முதலாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்களை கைப்பற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post