கர்ப்பவதிகளின் மகப்பேற்றுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - யாழ் போதனா பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice கர்ப்பவதிகளின் மகப்பேற்றுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - யாழ் போதனா பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

கர்ப்பவதிகளின் மகப்பேற்றுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - யாழ் போதனா பணிப்பாளர் தெரிவிப்பு


கொரோனா தொற்று டைய கர்ப்பவதிகளுக்கு  மகப்பேற்றின் போது சிகிச்சை அளிப்பதற்கு யாழ் போதனா வைத்தியசாலையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பவானந்தராஜா தெரிவித்தார்.

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண்களின் குழந்தை பிரசவத்திற்கு  யாழ் போதனா வைத்தியசாலையில் எவ்வாறான நடைமுறைகள் பின் பற்றப்படுகின்றன என அவரிடம்  தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி பருத்தித்துறை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பவதிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்குவதற்காக பிரத்தியோக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதிப் பெண்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி நிலை காணப்படுகிறது.

அதற்காக ஆதார வைத்தியசாலைகளில்  இவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியோகமான வைத்தியர்கள் கடமை ஈடுபடுத்தப்பட்டுள்ளானர்.

ஆகவே  ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதிப் பெண்கள் குழந்தை பிரசவிக்கும் காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் பிரசவத்தை உரிய முறையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post