ஈழத்தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் - தமிகழக முதல்வரிடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி கோரிக்கை - Yarl Voice ஈழத்தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் - தமிகழக முதல்வரிடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி கோரிக்கை - Yarl Voice

ஈழத்தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் - தமிகழக முதல்வரிடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி கோரிக்கை
தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஜானநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. வேந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  முதலமைச்சர்வேட்பாளராக முதல்முறையே களமிறங்கி அமோகவெற்றியை பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு ஆறாவது முறையாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும் திராவிடமுன்னேற்ற கழக உறுப்பினர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்

முதலமச்சர் அவர்களின் ஆட்சியில் எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழக தமிழ்மக்களின் வாழ்க்கையில் கஸ்டதுன்பங்கள் நீங்கி செல்வச் செழிப்புடன் பிரகாசமாக
வாழ்வார்கள் என்று நம்புகின்றோம்

 அத்தோடு பாரிய கஸ்ரங்களை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் மறுமலர்சி ஏற்பட ஸ்ராலின் அவர்கள் மாற்றங்களை ஏற்படுத்துவார் என்றும்  எதிர்பார்கிறோம் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post