-யாழ். நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில்- குடித்து, உணவும் உட்கொண்ட பின்னர் பணம் கொடுக்காமல் சென்றவர்களை தேடி வலைவீச்சு - Yarl Voice -யாழ். நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில்- குடித்து, உணவும் உட்கொண்ட பின்னர் பணம் கொடுக்காமல் சென்றவர்களை தேடி வலைவீச்சு - Yarl Voice

-யாழ். நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில்- குடித்து, உணவும் உட்கொண்ட பின்னர் பணம் கொடுக்காமல் சென்றவர்களை தேடி வலைவீச்சுயாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஹொட்டல் ஒன்றுக்கு சென்று வயிறு முட்டக் குடித்து, தரமான உணவும் சாப்பிட்ட பின்னர் பணம் கொடுக்காமல் தப்பிச்சென்ற இருவர் தற்போது வசமாக மாட்டியுள்ளனர். மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் அடிப்படையில் அவர்கள் சிக்கியுள்ளனர்.  

இன்று (19) மதியம் 2.00 மணிக்கு மேற்படி ஹொட்டலுக்கு சென்ற இருவர் மதுபானம், உணவு என 3 ஆயிரத்து 223 ரூபாவுக்கு சாப்பிட்டனர். பின்னர் பணத்தை செலுத்தாமல் தப்பிச்சென்றனர். 

உடனடியாகச் செயற்பட்ட ஹொட்டல் பணியாளர்கள் கண்காணிப்புக் கமராவில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடையாளப்படுத்தி பொலிஸாரின் உதவியுடன் அதை பரிசீலித்தபோது பொன்னாலை தெற்கைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. 

ஹொட்டல் பணியாளர்கள் சில மணி நேரத்திலேயே அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த இலக்க மோட்டார் சைக்கிளை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் தரகர் ஒருவர் மூலம் வெளி இடத்தைச் சேர்ந்த  ஒருவருக்கு தாம் விற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். 

மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த அன்றே உரிமை மாற்றப் படிவத்தில் தாம் கையெழுத்திட்டுக் கொடுத்தார் எனவும் அவர் கூறினார். விடுதிக்கு வந்தவரும் அவர் அல்லர் என பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். 

இந்நிலையில் தரகரின் உதவியுடன் குறித்த நபர்களை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post