அரசியல்வாதிகளின் ஆசீவாதத்துடன் நெடுந்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு -கண்டும் காணாமல் அரச அதிகாரிகள்- - Yarl Voice அரசியல்வாதிகளின் ஆசீவாதத்துடன் நெடுந்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு -கண்டும் காணாமல் அரச அதிகாரிகள்- - Yarl Voice

அரசியல்வாதிகளின் ஆசீவாதத்துடன் நெடுந்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வு -கண்டும் காணாமல் அரச அதிகாரிகள்-
நெடுந்தீவு மேற்கு ஜே-02 கிராமசேவகர் பகுதி கடற்கரையில் பெருமளவு மணல் சட்டவிரோதமாக ஏற்  றப்பட்ட நிலையில் குறித்த பகுதியை கடல்காவு கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெடுந்தீவு மேற்கு லோறன்சியார் ஆலயம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியிலேயே சுமார் 100 மீற்றர் நீளமான பகுதியில் 3 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு 60 லோட்டுக்கும் அதிகமான மணல் அகழப்பட்டு உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட போதும்  நெடுந்தீவின் உயர் அதிகாரிகளோ பொலிஸாரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெடுந்தீவில் மணல் அகழ்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதியில்  மணல் அகழ்வதற்கு யார்? அனுமதி வழங்கியது எனவும் அவர்கள்  கேள்வியெழுப்புகின்றனர்.

குறித்த பகுதியில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்றதாகவும் நெடுந்தீவு பிரதேச சபையில் ஆளும் தரப்பினை சேர்ந்த பிரதேச சபை அரசியல்வாதி ஒருவரின் துணையுடனேயே குறித்த மணல் அகழ்வு இடம்பெற்றதாகவும் தெரியவருக்கின்றது.

வீட்டுத்திட்டத்தினை பெற்ற மக்கள் வெளியிடங்களில் இருந்து பெரும் தொகைப் பணத்தினை செலுத்தி மணலைப் பெற்றுவரும் நிலையில் சில பிரதேச அரசியல்வாதிகள் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதால் சூழல் பெரும் பாதிப்பை சந்திப்பதோடு சிலர் சட்டவிரோத அகழ்வின் மூலம் பெருமளவு பணத்தினையும் சுருட்டிச் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் ஓரிரு நாட்களில் 60 மேற்பட்ட மணல் லோட்டுக்கள் ஏற்றப்பட்ட நிலையில் குறித்த மணல் எங்கு பறிக்கப்பட்டது என்பதை கண்டறிவது மிக இலகுவானது. ஆகையல் அதிகாரிகளும் பொலிஸாரும் உரிய விசாரணையினை மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post