தென்னிலங்கையில் இருந்து வெசாக் படையெடுப்பு ஏற்பட்டால் யாழ் மாவட்டத்தில் கொரோன அலை அதிகரிக்கும் ஆபத்து - சபாகுகதாஸ் சுட்டிகாட்டு - Yarl Voice தென்னிலங்கையில் இருந்து வெசாக் படையெடுப்பு ஏற்பட்டால் யாழ் மாவட்டத்தில் கொரோன அலை அதிகரிக்கும் ஆபத்து - சபாகுகதாஸ் சுட்டிகாட்டு - Yarl Voice

தென்னிலங்கையில் இருந்து வெசாக் படையெடுப்பு ஏற்பட்டால் யாழ் மாவட்டத்தில் கொரோன அலை அதிகரிக்கும் ஆபத்து - சபாகுகதாஸ் சுட்டிகாட்டு
தென்னிலங்கையில் இருந்து வெசாக் படையெடுப்பு ஏற்பட்டால் யாழ் மாவட்டத்தில் கொரோன அலை அதிகரிக்கும் ஆபத்து எனத் தெரிவித்துள்ள முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபாகுகதாஸ் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
எதிர்வரும் 25 திகதி நடைபெறவுள்ள வெசாக் பண்டிகைக்காக தென்னிலங்கையில் இருந்து படையெடுக்கும் மக்களால் யாழ்மாவட்ட மக்கள் பெருமளவு கொரோனா தாக்கத்திற்கு உட்பட வாய்ப்புக்கள் உள்ளது. இது ஆபத்தான சூழ்நிலைகளை அதிகரிக்கும்.

 யாழ் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இந்த விடையத்தில் மிக துணிச்சலாக செயற்பட வேண்டும் உள்ளூர் கட்டுப்பாடுகள் இறுக்கமாக பேணப்படும் போது வெளி மாகாணங்களில் இருந்து வருகை தருவோர் தொடர்பில் மிகவும் அவதானம் தேவை.

 அந்தவகையில் மாவட்டத்தில் நடைபெறும் பண்டிகைகள் விழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அதே நேரம் வெசாக் பண்டிகைகளுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம்.

 இன்று கொரோனா எண்ணிக்கை மேல், மத்திய,வடமத்திய மாகாணங்களில் பெரும் அலையாக மாறி யாழ்ப்பாண மாவட்டமும் நாள் தோறும் அபாய இலக்கை நோக்கி நகரும் போது வெசாக்  பண்டிகைகளில் வெளி மாகாணத்தவரின் வருகை மிக அபத்தமானதாகும். 

நோய் இல்லாத தேசமாக மாற கட்டுப்பாடுகள் அவசியம் அதனை சுகாதார அதிகாரிகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post