இனப்படுகொலை நடந்த முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை - சபா குகதாஸ் தெரிவிப்பு - Yarl Voice இனப்படுகொலை நடந்த முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை - சபா குகதாஸ் தெரிவிப்பு - Yarl Voice

இனப்படுகொலை நடந்த முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை - சபா குகதாஸ் தெரிவிப்புஇனப்படுகொலை நடந்த முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ அதே மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் கலாசார மத அடையாளங்களை பிரதிபலித்த ஆதிசிவன் ஐய்யனார் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கையகப்படுத்தி இராணுவ இரும்புக்கரம் கொண்டு எந்தவிதமான ஐனநாயக, சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாது பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு புத்தரின் சிலையை வைத்து பௌத்த பிக்குகளினால் பிரித்து ஓதல் நடைபெறுதல் மீண்டும் ஒரு கலாசார படுகொலையை முல்லை மண்ணில் அரங்கேற்றியுள்ளது.

தொல்லியல் திணைக்களம் ஏற்கனவே குருந்தூர் மலையில் மேற்கொண்ட ஆய்வில் இறுதியில் கண்டெடுக்கப்பட்டது சிவலிங்க வடிவிலான தொல் பொருள் என்பது உலகமே அறிந்த விடையம்.

அத்துடன் குருந்தமரம் என்பது இந்துக்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்று இதற்கு பல ஆதாரங்கள் உண்டு இவ்வாறான ஒரு கலாசாரப் பகுதி திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றது இதுவும் தமிழர்களின் கலாசாரத்தை இராணுவப் பிடிக்குள் வைத்து மேற்கொள்ளப் படும் படுகொலையாகவே அமைந்துள்ளது.

கொரோன பெரும் தொற்று என பிரகடனப்படுத்தி இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மக்களை கோரும் அரச இயந்திரம் தாங்களே அப்பட்டமாக மீறுகின்ற மிக அவலமான நிலை குருந்தூர் மலையில் இடம் பெற்றுள்ளது. சட்டம் யாருக்கு என்ற கேள்வி  எழுந்துள்ளதுடன் எதேச்சதிகாரம் மேலோங்கி உள்ளதையே இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post