நெல்லியடியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice நெல்லியடியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

நெல்லியடியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிநெல்லியடி மதுபானக்கடை காசாளர், நெல்லியடி வடைக் கடையில் விற்பனை உதவியாளர் மற்றும் கரணவாய் அண்ணாசிலையடி பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று புதன்கிழமை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்த நெல்லியடி மத்திய கல்லூரி வீதியில் இயங்கும் மதுபான கடையில் பணிபுரியும் காசாளருக்கும், மதுபானக் கடைக்கு முன்பாக இயங்கும் வடை விற்பனையாளருக்கு உதவியாக நின்ற ஒருவருக்கும், மற்றும் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்த கரணவாய் அண்ணாசிலையடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post