- Yarl Voice - Yarl Voice



யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் முன்னரே ஆவணங்கள் சமர்ப்பிப்பது தொடர்பில் தயார்ப்படுத்தலுக்கு மக்களை அதிகாரிகள் உட்படுத்த வேண்டும் என்று யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் வீட்டுத்திட்டம் கிடைத்தவுடன் தான் மக்கள் தமது ஆவணங்களை எடுப்பதற்காக பிரதேச சபைக்கு வருகிறார்கள். ஆவணங்கள் பெயர்மாற்றம் செய்யப்படவில்லை என்ற காரணம் கூறி காணி உரிமையாளருக்கு வீட்டுத்திட்டத்தை நிராகரிக்கும் அதிகாரிகள் அந்த மக்கள் வீட்டுத்திட்டம் கிடைப்பதற்கு முன்னரே அவர்களை தயார்ப்படுத்த வேண்டும்.

வீட்டுத்திட்ட தெரிவில் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டுவதோடு வீடுகள் இல்லாத மக்களின் காதுகளுக்கு இந்த அறிவித்தல் போய்ச் சேர வேண்டும். அதற்கான வழிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

வீட்டுத்திட்டம் கிடைத்தவுடன்  ஆவணங்களை தமது பெயருக்கு மாற்றுவதற்காக பிரதேச சபைக்கு வரும் மக்களுக்கு உடனடியாக ஆவணங்களை தயார் செய்து வழங்கமுடியாது இருக்கிறது. இதனை பிரதேச செயலகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரதேச செயலகம் பிரதேச சபையுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினையை இல்லாமல் செய்ய முடியும். ஆவணங்களை வழங்கவில்லை என்று பிரதேச சபையை குறைகூறுவதை விட்டுவிட்டு வீட்டுத்திட்டம் கிடைப்பதற்கு முன்னரே அந்த பயனாளிகளை தயார்படுத்துவது பிரதேச செயலகத்தின் கடமையாகும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post