நினைவு நாளில் குப்பைகாடாக கிடந்த குமுதினி நினைவாலயம் - நெடுந்தீவு பிரதேச சபையின் விசமச்செயல்- - Yarl Voice நினைவு நாளில் குப்பைகாடாக கிடந்த குமுதினி நினைவாலயம் - நெடுந்தீவு பிரதேச சபையின் விசமச்செயல்- - Yarl Voice

நினைவு நாளில் குப்பைகாடாக கிடந்த குமுதினி நினைவாலயம் - நெடுந்தீவு பிரதேச சபையின் விசமச்செயல்-




நெடுந்தீவு கடலில் 1985 மே15 ஆம் நாள்
 படுகொலை செய்யப்பட்ட 36 உறவுகளின்   36வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 

இறந்த உறவுகளின் நினைவாக நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவாலயம் இன்றையதினம் குப்பைகள் நிறைந்து காணப்பட்டமையால் மக்கள்  உறவுகள் கடும் விசனம் தெரிவித்தனர்.

நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்படும் குறித்த நினைவாலயம் கடந்த காலங்களில்  புனிதமாக பேணப்பட்ட நிலையில் தற்போதய பிரதேசசபை நிர்வாகம் அதன் புனிதத்தை கெடுக்கும் விதமாக செயல்படுவதாக இறந்தவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதய கொரோனா பரவலை காரணம் காட்டி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு  தடைவிதிக்கப்பட்ட நிலையில் குறித்த நினைவாலயத்துக்கு இன்று  சென்ற முன்னாள் பிரதேச சபை தலைவர் மற்றும் பலர் குமுதினி நினைவாலயத்தை தூய்மைப் படுத்தி அஞ்சலி செலுத்தினர். 

குறித்த நினைவாலயத்தின் தனித்துவத்தை கெடுக்கும் விதமாக நினைவாலய காணிக்குள் கடைத் தொகுதியமைத்த நெடுந்தீவு பிரதேச சபை தற்போது அதன்  புனிதத்தை கெடுக்கும் விதமாக செயற்படுவதாகவும் குறித்த நினைவாலயத்தை நெடுந்தீவு மக்கள் சார்ந்த பொதுக்கட்டமைப்பிடம் கையளிக்க பிரதேச சபை முன்வரவேண்டும் என இறந்தவர்களின் உறவுகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post