சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்



கொரோனவைரசிற்கு மத்தியில் சிறுவர்கள் சிறந்த உளநலத்துடன் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள வேளையில் பெற்றோர் குழந்தைகளுடன் அதிகநேரத்தை செலவிடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறை கொரோனாவைரஸ் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஐவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் சிறுவர்கள் தொடர்பில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்படாத போதிலும் மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளே முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதார வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ள பிரசாத் கொலம்பகே தற்போதைய சூழ்நிலையில் இரண்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தீவிரமாக எடுக்கவேண்டும் பல குழந்தைகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post