இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக யாழ்ப்பாணம் வந்தவர் தனிமைப்படுத்தலில் - Yarl Voice இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக யாழ்ப்பாணம் வந்தவர் தனிமைப்படுத்தலில் - Yarl Voice

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக யாழ்ப்பாணம் வந்தவர் தனிமைப்படுத்தலில்
இந்தியாவிலிருந்த மன்னர் கடல் ஊடாக படகில் வருகை தந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் வருகை தந்த நபரை மூளாயில் வைத்து கடற்படையினரும் சுகாதார தரப்பினரும் இணைந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இந்தியாவில் தாங்கி நின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் படகு மூலமாக மன்னாரை வந்தடைந்து பின்னர் பேருந்து மூலம் யாழ்ப்பாணம் மூளாயை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடற்படையினரும் சுகாதார தரப்பினரும் இணைந்து காரைநகரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்த நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post