ஸ்டாலினின் வெற்றி எமக்கான பலமாகவும் அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில் ரெலோ - Yarl Voice ஸ்டாலினின் வெற்றி எமக்கான பலமாகவும் அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில் ரெலோ - Yarl Voice

ஸ்டாலினின் வெற்றி எமக்கான பலமாகவும் அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில் ரெலோமுதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுகவின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் என ரெலோ தெரிவித்துள்ளது.

நபந்து முடிந்த தமிழக மாநில அவை தேர்தலில்  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முதலமைச்சராக பதவியேற்கும்  தலைவர் கௌரவ ஸ்டாலின் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியீட்டி இருப்பது, தமிழக மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும், எதிர்பார்ப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் தாங்கள் தமிழக மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலகம் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் உங்களுடைய வெற்றியியை எமக்கான பலமாகவே கருதுகிறோம்.

முதலமைச்சராக உங்கள் மகத்தான பணி வெற்றிகரமாக அமைய  வாழ்த்துகிறோம்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post