தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் சந்திப்பு - Yarl Voice தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் சந்திப்பு - Yarl Voice

தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் சந்திப்பு
தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துதமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் சமல்ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது பல்வேறு விடயங்களுக்கு அமைச்சர் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதுடன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

1.கல்முனை பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க இணக்கம் தெரிவித்தார். 

2. முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணி நிர்வாகத்தினை மகாவலி அதிகார சபை பொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக இணங்கினார்.  

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும் வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாக நடைபெறாதனவும் இணங்கினார். 

3. மாதுறு ஓயா இடது கரை நீர்ப்பாசன நீரை வாகனேரி குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விளானோடையில் தடுப்பு அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இணங்கினார். 

 4.மகாவலி நீர் கோடைகாலத்தில்  மாவில் பகுதியில் மறிக்கப்பட்டு கோடைகால விவசாயத்திற்காக மூதூர் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. 

 இதனால் மாவில் பகுதியிலிருந்து கடற்கரை வரையான 12KM நீளமான பகுதியில் மாகாவலி ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்று நீர்ப்பாசனம் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மார்ச் முதல் செப்ரெம்பர் வரை நீர் இன்மையால்  நீர்ப்பாசனம் செய்ய முடியாத நிலையில் பயிர்கள் அழிவடைகிறது.  

அதனால் மாதம் இருமுறை மாவில் பகுதியிலிருந்து நீரை திறந்து  ஏற்று நீர்ப்பாசன விவசாயிகளுக்கு வசதி செய்யுமாறு கோரனோம் அதற்கும் இணங்கினார். 

5.அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்ற விடயம் பற்றிப் பேசுவதற்கு இம்மாத இறுதியில் நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post