முன்னாள் எம்பி துரைரட்ணசிங்கத்திற்கு யாழில் அஞ்சலி - Yarl Voice முன்னாள் எம்பி துரைரட்ணசிங்கத்திற்கு யாழில் அஞ்சலி - Yarl Voice

முன்னாள் எம்பி துரைரட்ணசிங்கத்திற்கு யாழில் அஞ்சலிஇலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கத்தின் அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது .

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ,சீ.வீ.கே.சிவஞானம்  மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post