சாவகச்சேரி வைத்தியசாலையில் மூன்று கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று! - Yarl Voice சாவகச்சேரி வைத்தியசாலையில் மூன்று கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று! - Yarl Voice

சாவகச்சேரி வைத்தியசாலையில் மூன்று கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று!கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 3 கர்ப்பிணி பெண்கள், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக  வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாவது, சாவகச்சேரி வைத்தியசாலையில் 2 கர்ப்பிணி பெண்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணொருவர்,  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் என்பதனால் அதிகூடிய கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றோம். அத்துடன் அவர்களுக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படுமாயின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post