பிரபாகரனின் படம் அணிந்த ரீசேட்டுடன் சிக்கிய தமிழக மீனவர்கள் - திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை - Yarl Voice பிரபாகரனின் படம் அணிந்த ரீசேட்டுடன் சிக்கிய தமிழக மீனவர்கள் - திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை - Yarl Voice

பிரபாகரனின் படம் அணிந்த ரீசேட்டுடன் சிக்கிய தமிழக மீனவர்கள் - திருப்பி அனுப்பிய இலங்கை கடற்படை
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்தியப் படகில் பயணித்தவர்கள் பிரபாகரனின் படம் பதிக்கப்பட்ட சேட் அணிந்திருந்தமை தொடர்பில் கடற்படையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நேற்று முன்தினமும் ஓர் படகு ஊடுருவியுள்ளது. அவ்வாறு ஊடுருவிய படகில் பயணித்த மீனவர்கள் TPK எனப் பொறிக்கப்பட்டுள்ளதோடு மேதகு வே.பிரபாகரன் எனவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதுடன் பிரபாகரனின் புகைப்படமும் பெரிதாக போறிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வாறு உடை அணிந்திருந்தவர்களை புகைப்படம் எடுத்த பின்பு கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். இருப்பினும் அந்த புகைப்படம் சகிதம்  விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் குறித்த உடை அணிந்தவர்கள் கிராமங்களில் உள்ள சிறு குழுக்கள் அல்லது ரசிகர் மன்றங்கள் போன்றதாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post