உலக சுகாதார நிறுவனத்துக்கான தேர்தல் ! மறுபடியும் போட்டியிடும் டெட்ராஸ் ! - Yarl Voice உலக சுகாதார நிறுவனத்துக்கான தேர்தல் ! மறுபடியும் போட்டியிடும் டெட்ராஸ் ! - Yarl Voice

உலக சுகாதார நிறுவனத்துக்கான தேர்தல் ! மறுபடியும் போட்டியிடும் டெட்ராஸ் !
உலகசுகாதார நிறுவனத்தின் தற்போதைய  இயக்குனர் நாயகம் டெட்ராஸ் அடனோம் ஜெபிரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus)
இரண்டாவது தடவையாக அப்பதவிக்கு போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.  

2019 இல் சீனாவின் வுஹான் நகரத்தில்  புதிய சார்ஸ் கோவ் -2 (SARS-CoV-2 virus) உருவானதில் இருந்து உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக டெஸ்ரோஸ் இருந்துவருகிறார். 

2017 ஆம் ஆண்டில் எத்தியோப்பிய நாட்டவரான டெட்ராஸ் ஜெனிவாவை மையமாக கொண்ட ஐக்கியநாடுகள் அமைப்பின்  அனைத்துலக சுகாதார நிறுவனத்துக்கு பொறுப்பாக தெரிவு செய்யப்பட்ட முதல் ஆபிரிக்கராவார். 

இவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் தொடர்பாக உலக சுகாதார நிறுவன பேச்சாளர் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை. 
194 உறுப்பினர்களை கொண்ட இவ்வமைப்பின் தலைமை பதவிக்கு 2021 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியிடுவோர் தமது விண்ணப்பங்களை ரகசியமாக வரும் புரட்டாதி மாதத்திற்குள் உரியவர்களுக்கு அனுப்பிவைப்பார்கள் என உலக சுகாதார நிறுவன பேச்சாளர்  மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post