அரசியல் காரணங்களுக்காகவே ரிசாட் கைது - மோசமான செயல் என சுமந்திரன் கண்டனம் - Yarl Voice அரசியல் காரணங்களுக்காகவே ரிசாட் கைது - மோசமான செயல் என சுமந்திரன் கண்டனம் - Yarl Voice

அரசியல் காரணங்களுக்காகவே ரிசாட் கைது - மோசமான செயல் என சுமந்திரன் கண்டனம்



றிசாட் பதியுதீனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தமை மிகவும் மோசமான விடயமாகும்.அரசாங்கம் இப்பொழுது செய்திருக்கின்ற இக்கைது அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது எமக்கு தெளிவாக தெரிகின்றதுஎன தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


றிசாட் பதியுதீனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தமை மிகவும் மோசமான விடயமாகும்.அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர்.ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பந்தமாக அரசாங்கம் நியமித்திருந்த ஆணைக்குழுவிலும் கூட அவர் சம்பந்தமாக ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கின்றது.அதற்கு மேலதிகமாக அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருக்கவில்லை.

ஆகவே இப்படியான பின்னணியிலே அரசாங்கம் இப்பொழுது செய்திருக்கின்ற இக்கைது அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது எமக்கு தெளிவாக தெரிகின்றது.றிசாட் பதியுதீனின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எமது நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது.ஆனால் ஜனநாயகம் மறுக்கப்படுகின்ற பொழுது மக்களுடைய சுதந்திரம் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது அவர் எவராக இருந்தாலும் அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.

ஆகையினாலே றிசாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக நாங்கள் மிக வன்மையாக குரல் கொடுக்கின்றோம் என தெரிவித்தார்.   

0/Post a Comment/Comments

Previous Post Next Post