பிரதேச சபை உறுப்பினர் உட்பட கொடிகாமம் சந்தையில் இன்றும் ஐந்து பேருக்கு கொரோனா - Yarl Voice பிரதேச சபை உறுப்பினர் உட்பட கொடிகாமம் சந்தையில் இன்றும் ஐந்து பேருக்கு கொரோனா - Yarl Voice

பிரதேச சபை உறுப்பினர் உட்பட கொடிகாமம் சந்தையில் இன்றும் ஐந்து பேருக்கு கொரோனாயாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தையில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமம் சந்தை வியாபாரிகள் 169 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை நிலையிலேயே மேற்படி ஐந்து பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சந்தை வியாபாரிகள் சிலருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தை மூடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் சந்தை வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வந்து சென்றவர்கள் சிலருக்கு என 169 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் உட்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post